Wednesday, December 14, 2011

ஐயப்பன் மாலை மந்திரம், சரண கோஷம்




ஐயப்பன் மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் மாலை கழற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - தேஹமே விரத விமோசனம்


108 ஐயப்ப சரண கோஷம்

1. சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா
11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53. கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
54. கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
55. சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
61. சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
78. வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. கானக வாசனே சரணம் ஐயப்பா
80. குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
97. பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
105. சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
106. சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

ஓம் அடியேன் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!

மாலையை அவிழ்த்து விரதத்தை முடித்துக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்


பி.கு.: ஐயப்பன் மாலை மந்திரங்களும், சரண கோஷமும் தமிழில் தேடிய போது சட்டென்று கிடைக்கவில்லை. அதனால் கிடைத்ததை இங்கே இட்டு வைக்கலாமென்று...

Tuesday, October 4, 2011

அரஹரோஹரா!



அரஹரோஹரா முருகா அரஹரோஹரா
அரஹரோஹரா கந்தா அரஹரோஹரா
அரஹரோஹரா குமரா அரஹரோஹரா
அரஹரோஹரா வேலா அரஹரோஹரா

பச்சை மயில் வாகனனே அரஹரோஹரா
பழனி மலை பாலகனே அரஹரோஹரா
கச்சை யிலே உன் பெயரை அரஹரோஹரா
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம் அரஹரோஹரா

காவடிகள் எடுத்து வந்தோம் அரஹரோஹரா
கால்கடுக்க ஆடிவந்தோம் அரஹரோஹரா
வேலெடுத்து நீ வரணும் அரஹரோஹரா
வேதனைகள் தீர்த்திடணும் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

கண்மணியே கனியமுதே அரஹரோஹரா
கனிந்தநெஞ்சிற் கினியவனே அரஹரோஹரா
(ஞானப்)பழமுன்னைத் தேடிவந்தோம் அரஹரோஹரா
பழவினைகள் விரட்டிடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)

பலவாறாய் உனையிங்கு அரஹரோஹரா
பாசமுடன் அழைத்தோமே அரஹரோஹரா
பச்சைமயில் மீதேறி அரஹரோஹரா
இக்கணமே வந்திடுவாய் அரஹரோஹரா

(அரஹரோஹரா)


--கவிநயா

Tuesday, September 20, 2011

சீக்கிரமாய் வா!


முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா!
பக்தர்க் கருளும் சக்திக் கொழுந்தே
சரவண பவனே வா!

வண்ண மயிலேறி வாகாய் அமர்ந்து
சின்னக் குமரா வா!
சின்னக் குழந்தை வடிவில் ப்ரணவ
பொருள் சொன்னவனே வா!

விண்ணும் மண்ணும் வியந்தே போற்றும்
வடிவே லவனே வா!
கண்ணும் மனமும் கசியத் துதித்தோம்
கண்ணின் மணியே வா!

கன்னல் தமிழில் கவிதை சொல்வேன்
செல்லக் குமரா வா!
மின்னல் போலே எம்மைக் காக்க
விரைந்தே நீயும் வா!

சொல்லும் கவியில் சொல்லாய் பொருளாய்
சுவையாய் அமைவாய் வா!
கல்லும் கனியும் தமிழின் சுவையில்
கனிந்தே நீயும் வா!

சரவண பவனே சண்முக குகனே
சடுதியில் இங்கே வா!
சங்கரன் மகனே சங்கடம் தீர்க்க
சீக்கிரமாய் நீ வா!


--கவிநயா

ஒவ்வொரு பத்திக்கும் பிறகு,

"முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா வா"

என்கிற வரிகளை குழுவினர் இரண்டு முறை பாடலாம்.

Wednesday, August 31, 2011

கணபதியே போற்றி போற்றி!


இந்தப் பாடலை சுப்பு தாத்தா குரலில் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா! 

கார்மேக நிறங் கொண்ட கருணைமிகு கணபதியே
உன்பாதம் சரணமய்யா

பார்போற்றும் சதிபதியாம் பரமசிவன் பார்வதியின்
புதல்வனே சரணமய்யா

பேர்கொண்ட முதற்பிள்ளை தானென்று திகழும்உன்
திருப்பாதம் சரணமய்யா

மார்தன்னில் திருமகளைத் தாங்குகின்ற மாலவனின்
மருமகனே சரணமய்யா

வித்துக்கு வித்தாகி முத்தான முதற்பொருளே
முதல்வனே சரணமய்யா

சக்திக்குச் சொத்தான மத்தகக் கணபதியே
மலர்ப்பாதம் சரணமய்யா

தொந்திக்குள் உலகத்தை பந்தைப்போல் வைத்தாளும்
கஜமுகனே சரணமய்யா

வந்தித்து அனுதினமும் சிந்தித்து உனைப்பணிந்தோம்
சிவைமைந்தா சரணமய்யா

சுழிபோட்டு தொடங்கிவிட்டால் வழியெல்லாம் நேராக்கி
அருள்புரிவாய் போற்றி போற்றி

அழியாத வினைகளையும் பொழிகின்ற கருணையினால்
அழித்திடுவாய் போற்றி போற்றி

மரத்தடியாய் இருந்தாலும் மறுக்காமல் குடியேறும்
மயூரேசா போற்றி போற்றி

சிரத்தையுடன் பணிகின்றோம் சீக்கிரமே வந்திடுவாய்
திருவடிகள் போற்றி போற்றி!


--கவிநயா

Wednesday, August 3, 2011

எனை விடாத ஹரி நாமம்!



ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

**

படத்தைப் பெரிதுபடுத்திப் பாருங்க!

பாடல்: 'அருள் வழி துதிகள்' என்ற புத்தகத்திலிருந்து...
படம்: http://www.nidokidos.org/threads/45626-Tirupati-Venkateswara-swamy-pictures.

Tuesday, June 14, 2011

அம்மா சரணம்!



அம்மா சரணம் அம்மா சரணம் அம்பிகை சரணம் ஓம்சக்தி!
அன்பின் வடிவே அருளின் பொருளே அடைக்கலம் வந்தோம் ஸ்ரீசக்தி!

அன்பால் உன்றன் நாமம் சொன்னோம் சரணம் சரணம் ஓம்சக்தி!
உன்பால் கொண்ட அன்பால் உன்னைப் போற்றிப்பணிந் தோம் ஸ்ரீசக்தி!

கண்ணால் காக்கும் கருணை உருவே சரணம் சரணம் ஓம்சக்தி!
முன்னால் நின்று காக்கும் தெய்வத் தாயே சரணம் ஸ்ரீசக்தி!

பண்ணால் பாடி பாதம்பணிந் தோம் சரணம் சரணம் ஓம்சக்தி!
பலநாள் பாதம் நோகநடந் தோம் உன்னைக் காண ஸ்ரீசக்தி!

கல்லும் முள்ளும் காலுக்கு மலராம் சரணம் சரணம் ஓம்சக்தி!
குண்டும் குழியும் கண்ணுக்கு ஒளியாம் உன்றன் அருளால் ஸ்ரீசக்தி!

வழிக்குத் துணையாய் வருவாய் அம்மா சரணம் சரணம் ஓம்சக்தி!
விரைவாய் வருவாய் விலகா திருப்பாய் சரணம் சரணம் ஸ்ரீசக்தி!

உன்னைத் துதித்திட துன்பம் தீருது சரணம் சரணம் ஓம்சக்தி!
உன்னை இதயத்தில் இருத்திட இன்பம் வளருது அம்மா ஸ்ரீசக்தி!

குறையா அன்பை நிறைவாய்த் தருவாய் சரணம் சரணம் ஓம்சக்தி!
மறைவாழ் மணியே மனம்வாழ் உமையே சரணம் சரணம் ஸ்ரீசக்தி!!


--கவிநயா

Sunday, April 10, 2011

ராம ராம ராம ராம என்னும் நாமமே...

அனைவருக்கும் இனிய ஸ்ரீராம நவமி நல்வாழ்த்துகள்!



ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே

ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே

--கவிநயா

சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி சுப்பு தாத்தா!

Friday, March 18, 2011

வேங்கைமரமானவரே வேலாயுதா!



வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேங்கைமர மானவரே வேலாயுதா (வேல்

வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா

குன்றத்தில் அமர்ந்தவனே வேலாயுதா
குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பாய் வேலாயுதா
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதே
ஆறுமுக மானவரே வேலாயுதா (வேல்

செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
சென்மமதை தீர்த்திடுவாய் வேலாயுதா
பழனிமலை ஆண்டவரே வேலாயுதா
பழவினையை நீக்கிடுவாய் வேலாயுதா (வேல்

சுவாமிமலை சுவாமிநாதா வேலாயுதா
சுப்ரமண்ய மானவரே வேலாயுதா
திருத்தணிகை மலைசெல்வனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா (வேல்

சோலைமலை முருகனே வேலாயுதா
சொர்க்கமெல்லாம் தெரியுதப்பா வேலாயுதா
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா (வேல்

காவடிகள் ஆட்டத்திலே வேலாயுதா
கஷ்டமெல்லாம் தீர்ந்துபோகும் வேலாயுதா
பாற்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப்பார்க்க ஆனந்தமே வேலாயுதா (வேல்

கருணையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தாஉன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா (வேல்

Thursday, February 24, 2011

ஓம் முருகா ஓம்!


ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)

ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)

ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)

தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)

வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)

கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)

ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)

பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)

பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)

இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)

ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)

ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)


--கவிநயா

Wednesday, February 2, 2011

ஓம் நமோ நமசிவாய - 2



ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

ஒருகரத்தில் தீயையேந்தி மறுகரத்தில் உடுக்கையேந்தி
அண்டங்கள் யாவையுமே படைத்துக்காத்து அழிப்பவனே
ஒருகரத்தில் அபயந்தந்து மறுகரத்தில் பாதங்காட்டி
அண்டியவர் யாவரையும் அன்புடனே காப்பவனே

அந்திநிறம் கொண்டவனே ஆதிமூல மானவனே
நந்திதேவ வாகனனே துன்பந்தீர்க்கும் தூயவனே
விந்தைபல புரிபவனே சிந்தையெலாம் நிறைபவனே
சொந்தமென வந்தவனே சோதியாகி நின்றவனே

ஒருபதத்தைத் தூக்கிநின்று மறுபதத்தில் அசுரன்தன்னை
அடக்கிவைத்து அடியவர்க்கு அருள்கொடுக்கும் ஆண்டவனே
ஒருசெவிஎழிற் குண்டலமும் மறுசெவிபனை ஓலைதாங்க
அம்பலத்தில் நடனமிடும் ஆதிசிவ நாயகனே

நஞ்சையுண்ட காரணத்தால் நீலகண்டன் ஆனவனே
அஞ்சுகத்தை வாமங் கொண்டு அர்த்தநாரி யானவனே
நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் நித்தம்நித்தம் ஆடுவோனே
விஞ்சுகின்ற அன்புசெய்ய சித்தத்துள்ளே வாழுவோனே

ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. போன இடுகையில் இட்ட பாடலில் இன்னும் கொஞ்சம் சேர்த்து...