Monday, September 27, 2010

கண்ணனைப் பணி மனமே!



கண்ணனைப் பணி மனமே - தினமே
கண்ணனைப் பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய சொரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை
கண்ணனைப் பணி மனமே

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவளச் செவ்வாயனை பரமனை மாயனை
கண்ணனைப் பணி மனமே

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம்மிகு துளசி மாலனை பாலனை
கண்ணனைப் பணி மனமே

விண்ணவர் போற்றவே மண்ணில்வரும் வேதப்
பண்ணனை சியாமள வண்ணனை தாமரைக்
கண்ணனைப் பணி மனமே


(பாடல் அனுப்பித் தந்த கண்ணன் என்கிற கேயாரெஸுக்கு நன்றி!)

Sunday, September 19, 2010

கலைநிறை கணபதி சரணம் சரணம்



(குமரன் தந்த பாடல் விளக்கம் கீழே)

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்

சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்


படத்துக்கு நன்றி: தக்குடு

குமரன் தந்த பாடல் விளக்கம்: நன்றி குமரா!

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவ குக சரணம் சரணம்

சிலை மலை உடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம்
உமை சிவை அம்பிகை சரணம் சரணம்

சிவ குடும்பத்தைச் சரணடையும் வரிகள் இவை. கணபதியை முதல் மூன்று வரிகளாலும், சரவணபவகுகனை நான்காவது வரியாலும், சிராப்பள்ளி மலையையும் கைலை மலையையும் உடைய சிவபெருமானை அடுத்த இரு வரிகளாலும், நடுக்கம் இல்லாதவளும் நடுக்கம் தீர்ப்பவளுமான உமை சிவை அம்பிகை பராசக்தியை அடுத்த இரு வரிகளாலும் சரணடைகிறோம்.

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவம் அற நினைபவ சரணம்
நெடியவன் விழி தரு நெடியவ சரணம்

முதல் மூன்று வரிகளும் கணபதியைப் போற்றுகிறது. நான்காம் வரி சிவபெருமானைப் போற்றுகிறது. ஒரு முறை ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானைத் திருமால் அருச்சிக்கும் போது ஒரு தாமரை குறைய தாமரைக்கண்ணன் தனது ஒரு கண்ணையே எடுத்து அருச்சித்தாராம்; அப்போது சிவபெருமான் அவரது திருக்கண் திரும்பக் கிடைக்கும் படி அருளினாராம். அக்கதையைச் சொல்கிறது இந்த வரி.

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினில் உயரிய பெரியவ சரணம்
முறை தெரி மறையவ நிறையவ சரணம்
முடி அடி தெரி(ய) அரு முதியவ சரணம்

வல்லபையை அணைத்துக் கொண்டிருக்கும் வல்லப கணபதியை முதல் இரு வரிகளிலும், அடி முடி அறியவொண்ணா அண்ணாமலையானை அடுத்த இரு வரிகளாலும் போற்றுகிறது இவ்வரிகள்.

**
வலவையை மருவிய புயதரன் படம் அதனால் இந்த இடுகைக்குப் பொருத்தமாக இருக்கிறது. :)

(பொருள் தெரியாமலேயே இட்டேன், பொருத்தமாக தானே வந்து அமர்ந்து கொண்ட ஆனைமுகனின் கருணையை என்னென்பது! --கவிநயா)


சுப்ரமண்யம் சுப்ரமண்யம்



சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சண்முக நாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சரவண பவனே சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் பழனி முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஐயப்ப நாதா சுப்ரமண்யம்

சிவ சர வண பவ சுப்ரமண்யம்
குரு சர வண பவ சுப்ரமண்யம்
குரு சர வண பவ சுப்ரமண்யம்
சிவ சர வண பவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் செந்தூர் முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்

சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
ஹர ஹர ஹர ஹர சுப்ரமண்யம்
சிவ சிவ சிவ சிவ சுப்ரமண்யம்

சுப்ரமண்யம் சுப்ரமண்யம் வயலூர் முருகா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் சண்முக நாதா சுப்ரமண்யம்

குரு சர வண பவ சுப்ரமண்யம்
ஸ்ரீ சர வண பவ சுப்ரமண்யம்
ஸ்ரீ சர வண பவ சுப்ரமண்யம்
குரு சர வண பவ சுப்ரமண்யம்

ஓம் குரு நாதா சுப்ரமண்யம்
ஸ்ரீ குரு நாதா சுப்ரமண்யம்
ஸ்ரீ குரு நாதா சுப்ரமண்யம்
ஓம் குரு நாதா சுப்ரமண்யம்

ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரமண்யம்
ஓங்கார ரூபா சுப்ரமண்யம்
ஓங்கார ரூபா சுப்ரமண்யம்
ஓம் ஓம் ஓம் ஓம் சுப்ரமண்யம்

(சுப்ரமண்யம்)

பிள்ளையார் பிள்ளையார்




பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்

கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்

**