Friday, December 28, 2012

தந்தையே! விந்தையே!

ஆருத்ரா தரிசனத்தன்று சிவனுக்கு ஒரு பஜனைப் பாடல் இடுவது பொருத்தம் தானே? :)

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே
அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே
நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

இளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே
சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

குறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே
ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

படித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே
அம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே
பிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே
அடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

--கவிநயா

Saturday, December 22, 2012

சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா

Group: சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா
சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

எருமேலி வாசா ஏழை பங்காளா சரணம் ஐயப்பா
கரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

காடும் மேடும் நடந்து வந்தோம் சரணம் ஐயப்பா
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய் சரணம் ஐயப்பா
கனியின் சுவையாய் நீயே வருவாய் சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

புலியின் பாலைக் கொண்டு வந்தாயே சரணம் ஐயப்பா - எங்கள்
கிலியினை நீக்கி அருளிடு வாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

இருமுடி தாங்கி வந்தோம் அப்பா சரணம் ஐயப்பா
இருவினை அழித்து அருள் புரிவாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

நெய் யபிஷேகம் ஏற்றுக் கொள்வாயே சரணம் ஐயப்பா
நிலையாய் நெஞ்சில் குடியிருப் பாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

வேண்டும் யாவும் கொடுத்திடு வாயே சரணம் ஐயப்பா - எதும்
வேண்டாத உள்ளம் தந்திடுவாயே சரணம் ஐயப்பா

Group: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
            வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

பக்தரின் குறைகள் தீர்த்திடு வாயே சரணம் ஐயப்பா
குறையே இல்லா பக்தியைத் தருவாய் சரணம் ஐயப்பா

Everyone: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
                  வரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா

--கவிநயா

Monday, January 9, 2012

அடைக்கலம் நீயே!

அம்மா சரணம் அம்மா சரணம்
அம்பிகை யேஉன் பதம்சரணம்
அன்பின் வடிவே அருளின் பொருளே
அடைக்கலம் நீயே அருள்சரணம்

பாலை வடிவாய் விளங்கும் தாயே
பாலாம் பிகையே பதம்சரணம்
பாலை யெல்லாம் சோலை யாக்கும்
வசந்தம் நீயே வாசரணம்

காமனை எரித்த காமேச் வரனை
கண்ணால் ஆள்பவ ளேசரணம்
காமங்கள் எரித்து கனிவுடன் எமையும்
காப்பாய் காமேச் வரிசரணம்

இதழில் கனியும் புன்னகை யாலே
இதயம் கவர்பவ ளேசரணம்
மதகை மீறிப் பெருகும் அன்பில்
மகிழ்ந் தாடும்மா தேசரணம்

இல்லை என்றே சொல்லா தெதையும்
அள்ளித் தருபவ ளேசரணம்
தொல்லை எதுவும் இல்லாமல் எமை
தொடர்ந்தே காக்கும் தாய் சரணம்

ஆயிர மாயிரம் நாமங்கள் விளங்கும்
அதிசய வடிவுடை யாய்சரணம்
அதிலொரு நாமம் சொன்னால் கூட
அகமகிழ்ந் தருளிடு வாய்சரணம்

அம்மா என்று சொல்லும் போதே
அகஇருள் விலகிடு மேசரணம்
சும்மா உன்னை நினைத்தால் கூட
சுகம்மிக வாகிடு மேசரணம்

அம்மா சரணம் அம்மா சரணம்
அம்பிகை யேஉன் பதம்சரணம்
அன்பின் வடிவே அருளின் பொருளே
அடைக்கலம் நீயே அருள்சரணம்!

--கவிநயா