
அம்மா சரணம் அம்மா சரணம் அம்பிகை சரணம் ஓம்சக்தி!
அன்பின் வடிவே அருளின் பொருளே அடைக்கலம் வந்தோம் ஸ்ரீசக்தி!
அன்பால் உன்றன் நாமம் சொன்னோம் சரணம் சரணம் ஓம்சக்தி!
உன்பால் கொண்ட அன்பால் உன்னைப் போற்றிப்பணிந் தோம் ஸ்ரீசக்தி!
கண்ணால் காக்கும் கருணை உருவே சரணம் சரணம் ஓம்சக்தி!
முன்னால் நின்று காக்கும் தெய்வத் தாயே சரணம் ஸ்ரீசக்தி!
பண்ணால் பாடி பாதம்பணிந் தோம் சரணம் சரணம் ஓம்சக்தி!
பலநாள் பாதம் நோகநடந் தோம் உன்னைக் காண ஸ்ரீசக்தி!
கல்லும் முள்ளும் காலுக்கு மலராம் சரணம் சரணம் ஓம்சக்தி!
குண்டும் குழியும் கண்ணுக்கு ஒளியாம் உன்றன் அருளால் ஸ்ரீசக்தி!
வழிக்குத் துணையாய் வருவாய் அம்மா சரணம் சரணம் ஓம்சக்தி!
விரைவாய் வருவாய் விலகா திருப்பாய் சரணம் சரணம் ஸ்ரீசக்தி!
உன்னைத் துதித்திட துன்பம் தீருது சரணம் சரணம் ஓம்சக்தி!
உன்னை இதயத்தில் இருத்திட இன்பம் வளருது அம்மா ஸ்ரீசக்தி!
குறையா அன்பை நிறைவாய்த் தருவாய் சரணம் சரணம் ஓம்சக்தி!
மறைவாழ் மணியே மனம்வாழ் உமையே சரணம் சரணம் ஸ்ரீசக்தி!!
--கவிநயா
2 comments:
தாயபிராமியாய்த் திருக்கடவூரினில்
திருவருள் புரியும் ஓம்சக்தி!
சேயென நாங்கள் உன் மடி புகுந்தே
சுகம்பெற வந்தோம் ஸ்ரீ சக்தி !
தூய மனத்தால் உன்னடி பணிந்தே
துதிபாடுகிறோம் ஓம்சக்தி!
மாயே!எங்கள் மனமருள் நீக்கி
மங்கலமருள்வாய் ஸ்ரீசக்தி!
ரொம்ப அழகா இருக்கு லலிதாம்மா, நீங்க தந்த வரிகள்! மிக்க நன்றி.
Post a Comment
வாங்க, வணக்கம்!