Wednesday, February 2, 2011

ஓம் நமோ நமசிவாய - 2



ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

ஒருகரத்தில் தீயையேந்தி மறுகரத்தில் உடுக்கையேந்தி
அண்டங்கள் யாவையுமே படைத்துக்காத்து அழிப்பவனே
ஒருகரத்தில் அபயந்தந்து மறுகரத்தில் பாதங்காட்டி
அண்டியவர் யாவரையும் அன்புடனே காப்பவனே

அந்திநிறம் கொண்டவனே ஆதிமூல மானவனே
நந்திதேவ வாகனனே துன்பந்தீர்க்கும் தூயவனே
விந்தைபல புரிபவனே சிந்தையெலாம் நிறைபவனே
சொந்தமென வந்தவனே சோதியாகி நின்றவனே

ஒருபதத்தைத் தூக்கிநின்று மறுபதத்தில் அசுரன்தன்னை
அடக்கிவைத்து அடியவர்க்கு அருள்கொடுக்கும் ஆண்டவனே
ஒருசெவிஎழிற் குண்டலமும் மறுசெவிபனை ஓலைதாங்க
அம்பலத்தில் நடனமிடும் ஆதிசிவ நாயகனே

நஞ்சையுண்ட காரணத்தால் நீலகண்டன் ஆனவனே
அஞ்சுகத்தை வாமங் கொண்டு அர்த்தநாரி யானவனே
நெஞ்சுக்குள்ளே நர்த்தனங்கள் நித்தம்நித்தம் ஆடுவோனே
விஞ்சுகின்ற அன்புசெய்ய சித்தத்துள்ளே வாழுவோனே

ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ ந மசிவாய
ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. போன இடுகையில் இட்ட பாடலில் இன்னும் கொஞ்சம் சேர்த்து...

4 comments:

மதுரை சரவணன் said...

ஓம்நமோ ந மசிவாய ஓம்நமோ நமோ


வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

Kavinaya said...

வருகைக்கு நன்றி, சரவணன்!

Lalitha Mittal said...

the bhajan is nice kavinaya;where is the link for hearing it?i couldn't locate.but within myself i sang in the mettu of:
"om namo narayanaya,om namo narayanaya
om namo narayanaya,om namo namo"
is it the same?

Kavinaya said...

இதில் ஆடியோ இல்லையம்மா. நீங்க நினைச்சிருப்பது சரியான மெட்டுதான். வருகைக்கு நன்றி லலிதாம்மா!

Post a Comment

வாங்க, வணக்கம்!