Friday, March 18, 2011
வேங்கைமரமானவரே வேலாயுதா!
வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேங்கைமர மானவரே வேலாயுதா (வேல்
வேல்வேல் வேல்முருகா வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா
குன்றத்தில் அமர்ந்தவனே வேலாயுதா
குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பாய் வேலாயுதா
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதே
ஆறுமுக மானவரே வேலாயுதா (வேல்
செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
சென்மமதை தீர்த்திடுவாய் வேலாயுதா
பழனிமலை ஆண்டவரே வேலாயுதா
பழவினையை நீக்கிடுவாய் வேலாயுதா (வேல்
சுவாமிமலை சுவாமிநாதா வேலாயுதா
சுப்ரமண்ய மானவரே வேலாயுதா
திருத்தணிகை மலைசெல்வனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா (வேல்
சோலைமலை முருகனே வேலாயுதா
சொர்க்கமெல்லாம் தெரியுதப்பா வேலாயுதா
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா (வேல்
காவடிகள் ஆட்டத்திலே வேலாயுதா
கஷ்டமெல்லாம் தீர்ந்துபோகும் வேலாயுதா
பாற்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப்பார்க்க ஆனந்தமே வேலாயுதா (வேல்
கருணையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தாஉன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா (வேல்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
தருவானவன், அள்ளித் தருவானவன்;
தருதருங்கனியாக அருள்வானவன் ;
தருநிழலாய் வினைவெம்மைத்தணிப்பானவன்;-கல்பத்
தருபோலே கொடுத்தருளும் கருணாகரன்!
பஜனைப்பாட்டு மூலம் எல்லா முருகத்தலங்களையும் தரிசனம் செய்வித்த கவிநயா!எங்கிருந்தாலும் வாழ்க!
தருவானவன், அள்ளித் தருவானவன்;
தருதருங்கனியாக அருள்வானவன் ;
தருநிழலாய் வினைவெம்மைத்தணிப்பானவன்;-கல்பத்
தருபோலே கொடுத்தருளும் கருணாகரன்!
பஜனைப்பாட்டு மூலம் எல்லா முருகத்தலங்களையும் தரிசனம் செய்வித்த கவிநயா!எங்கிருந்தாலும் வாழ்க!
சின்ன வயசுல அம்மா சொல்லிக் கொடுத்த பாட்டு. :-)
அப்ப எல்லா எதுக்கு வேலவர் வேங்கைமரமானார்ன்னு புரியாது; யார்கிட்டயும் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க. :-)
வாங்க லலிதாம்மா! சமீபத்தில் சிவகுமாரனின் பாட்டு ஒண்ணு படிச்சேன், அந்த மெட்டில் எழுதி இருக்கீங்க நீங்களும் :) படத்தை பார்த்தீங்களா. முந்திரிப்பருப்பு மாலை. யார் அனுப்பினான்னு நினைவில்லை. ஆனா ரொம்ப பிடிச்சது.
வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி அம்மா!
//சின்ன வயசுல அம்மா சொல்லிக் கொடுத்த பாட்டு. :-)//
:)))
//அப்ப எல்லா எதுக்கு வேலவர் வேங்கைமரமானார்ன்னு புரியாது; யார்கிட்டயும் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க. :-)//
இப்ப நீங்க தெரியும்னு சொல்லலாமே! :)
வருகைக்கு நன்றி குமரா.
நீ சுட்டிக்காட்டியபிறகுதான் முந்திரி மாலை என்று புரிந்தது!உற்றுப்பார்த்ததும் பீரிட்டுவந்த பாட்டை எழுதாமல் இருக்கமுடியலையே!
தொந்திக் கணபதி தம்பியே!வேலாயுதா!
முந்திரிப்பருப்பு மாலைமார்பா!வேலாயுதா!
'கந்தன்'என்றால் 'கருணை'யன்றோ?வேலாயுதா!
இந்த 'சிந்து' மலருனக்கே,வேலாயுதா![வேல்,வேல்]
பாடல் அருமை அம்மா! நன்றி.
//உற்றுப்பார்த்ததும் பீரிட்டுவந்த பாட்டை எழுதாமல் இருக்கமுடியலையே!//
எதுக்கு எழுதாம இருக்கணும்? கண்டிப்பா எழுதணும் :)
Post a Comment
வாங்க, வணக்கம்!