
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)
ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)
ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)
தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)
வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)
கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)
ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)
பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)
பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)
இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)
ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)
ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)
--கவிநயா