கந்தா கடம்பா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா
கார்த்திகை மைந்தா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா!
அழகா அமுதா அருள்வேலா
அம்பிகை மைந்தா எழில்பாலா
அறுமுக நாதா அருள்வேலா
அடிமலர் பணிந்தோம் எழில்பாலா!
வருவாய் வருவாய் வடிவேலா
வள்ளி மணாளா உமைபாலா
தருவாய் தருவாய் வடிவேலா
திருவருள் தருவாய் உமைபாலா!
--கவிநயா
4 comments:
முருகனும் கவிதையும் மிக அருமை. எளிமையான வரிகள். அழகாகவும் இருக்கின்றன.
நன்றி ராதா :)
அருமை
முதல் வருகைக்கு நன்றி திகழ்.
Post a Comment
வாங்க, வணக்கம்!