Wednesday, October 6, 2010

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!


வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேலாயுதா வேல்முருகா வேல்வேல்

ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகா வேல்வேல்
ஏறுமயில் வாகனனே வேல்முருகா வேல்வேல்

ஓம்முருகா என்றுதினம் உந்தன் நாமம் வேல்வேல்
ஓயாமல் ஜெபித்திருப்போம் வேல்முருகா வேல்வேல்

பாலாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
பக்தர்களைக் காத்திடுவாய் வேல்முருகா வேல்வேல்

தேனாபிஷேகங்கள் ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தெரியாமல் செய்யும்பிழை பொறுத்தருள்வாய் வேல்வேல்

வாசமலர் மாலைகளை ஏற்றுக் கொள்வாய் வேல்வேல்
தேசொளிரும் பாலகனே வேல்முருகா வேல்வேல்

வீசுகின்ற தென்றல் போல வேல்முருகா வேல்வேல்
எங்கள் வாழ்வில் வந்தவனே வேல்முருகா வேல்வேல்

அன்போடு நாங்கள் செய்யும் அத்தனையும் வேல்வேல்
ஆதரவாய் ஏற்றுக் கொண்டு அருள்புரிவாய் வேல்வேல்

--கவிநயா

2 comments:

Post a Comment

வாங்க, வணக்கம்!