
அனுமந்தா அனுமந்தா
அஞ்சனை மைந்தா அனுமந்தா!
அனுமந்தா அனுமந்தா
ஆஞ்ச நேயா அனுமந்தா!
ஆஞ்ச நேயா அஞ்சனை மைந்தா
அஞ்சாத வீரா அனுமந்தா!
துஞ்சாமல் அனுதினம் கண்போல ராமரை
நெஞ்சார போற்றிடும் அனுமந்தா!
கதிரவன் தன்னை பழமென்று எண்ணி
கைகளில் பிடித்தாய் அனுமந்தா!
காற்றினில் ஏறி கடலினைக் கடந்து
இலங்கையைப் பொடித்தாய் அனுமந்தா!
புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!
கருத்திட்ட வண்ணன் கமலக் கண்ணன்
கதையினைச் சொன்னால் அனுமந்தா!
கருத்துடன் அமர்ந்து கண்ணீர் பெருக
கேட்டிடு வாயே அனுமந்தா!
நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா!
--கவிநயா
7 comments:
enge. anuman paattu innum varalaiye, naamaLe cholvOmaa-nu nERthu thaan ninachen...innikki vanthu nikkuthu :)
anuman illaatha oru naama sankeerthanam-aa?
//புத்தியில் பக்தியில் சக்தியில் உனக்கு
நிகரில்லை எவரும் அனுமந்தா!
அத்தனை இருந்தும் அடக்கத்தின் உருவாய்
திகழ்பவன் நீயே அனுமந்தா!//
I like this!
வாங்க கண்ணா. உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :) மிக்க நன்றி.
//நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா! //
:-)
எனக்கு தெரிந்த ஒரு பஜனை பாடல்:
ஆஞ்சநேய வீரா !
அனுமந்த சூரா !
வாயு குமாரா !
வானர வீரா !
ஸ்ரீ ராம் ! ஜெய் ராம் !
ஜெய ஜெய ராம் !
சீதா ராம் - ஜெய
ராதே ஷ்யாம் !
//நெருப்பிட்ட வாலினை முடிவில் லாமல்
நீண்டிடச் செய்தாய் அனுமந்தா!
விருப்புடன் எந்தன் பக்தியும் அதுபோல்
வளர்ந்திட அருள்வாய் அனுமந்தா! //
:-) //
:) பக்தியைத் தான்னு வேண்டிக்க, பக்த ஆஞ்சநேயரை விடப் பொருத்தமானவர் யாரு :)
வருகைக்கு நன்றி ராதா.
//ஆஞ்சநேய வீரா !
அனுமந்த சூரா !
வாயு குமாரா !
வானர வீரா !
ஸ்ரீ ராம் ! ஜெய் ராம் !
ஜெய ஜெய ராம் !
சீதா ராம் - ஜெய
ராதே ஷ்யாம் ! //
அழகான குட்டி பஜன். பகிர்ந்தமைக்கு நன்றி ராதா.
வாழ்த்துக்கள் கவிநயா. தொடா்ந்து அதிகமான பஜனைப் பாடல்களை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பாடல்களை ராகத்துடன் பாடி யுடியுபில் வெளியிட்டு அந்த லிங்க்கை இங்கு கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
Post a Comment
வாங்க, வணக்கம்!