ஒருவர் பாட, குழுவினர் ஹரோஹரா சொல்லணும்.
இணையத்திலிருந்து எடுத்தது. இட்டவருக்கு நன்றிகள் பல.
ஆலோலம் பாடுகின்ற
வள்ளியம்மை கழுத்தில்
அணியாரம் இட்ட பெருமான் - ஹரோஹரா
ஆகாயம் பூமியிடை
நீராவி போல் வடிவில்
ஆதாரமான பெருமான் - ஹரோஹரா
மேலாளர் கீழாளர்
பேதங்கள் இல்லாது
மெய்யான பெருமான் - ஹரோஹரா
மின்னாகி இடியாகி
மழையாகி காற்றாகி
விளைவாக நின்ற பெருமான் - ஹரோஹரா
கோலாலம்பூர் வளர்
கோ தண்டபாணி - இவன்
கோவில் கொண்டடு மனமே - ஹரோஹரா
கூற்றேதும் வாராது
கொடுநோயும் சேராது
குறையாத வாழ்வு மிகுமே - ஹரோஹரா
ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே - ஹரோஹரா
ஓசைக்கு மணியுண்டு
பூசைக்கு மணமுண்டு
உன் வாழ்வு கந்தன் வசமே - ஹரோஹரா
நாமேன்ற ஆங்காரம்
நமதென்ற எக்காளம்
நடவாது வேலனிடமே - ஹரோஹரா
நடக்கட்டும் பார்ப்போம்
என்றிருக்கட்டும் உன் உள்ளம்
நலம் யாவும் வீடு வருமே - ஹரோஹரா
கோமன்னன் வாழ்கின்ற
கோலாலம்பூர் செந்தூர்
கொடி கட்டி ஆள விடுமே - ஹரோஹரா
கொண்டாடு கொண்டாடு
தெண்டாயுதத் தானை
குறையாது செல்வ மிகுமே - ஹரோஹரா
7 comments:
அரோகரா! அரோகரா!
வள்ளியம்மை கழுத்தில் அணியாரம் இட்ட பெருமான்!
ஆதாரமான பெருமான்! மெய்யான பெருமான்! விளைவாக நின்ற பெருமான்!
சூப்பர் வரிகள்! அப்படியே என் முருகன் நடந்து வரும் போது சொல்லும் பராக் பராக் போலவே இருக்கு! :)
//ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே//
அது அவன் வீடு இல்லை! என் வீடு! எனக்கு-ன்னு அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய காதல் வீடு! :)
வருக கண்ணா.
ஆமாம், முதல் முறை வாசிச்சப்பவே எனக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு இந்தப் பாடல்.
//எனக்கு-ன்னு அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய காதல் வீடு! :)//
அது என்ன காதல் வீடு? எனக்கு ஒண்ணும் புரியலை. சுருக்கமாக விளக்கவும் :)
//அது என்ன காதல் வீடு? எனக்கு ஒண்ணும் புரியலை. சுருக்கமாக விளக்கவும் :)//
//ஓம் என்ற சிறு முட்டை
உள் வீடு அவன் வீடு
உன் வீடும் அந்த இடமே//
அ= அவன்
ம்= நான்
உ = உறவு
உன் தன்னோடு (அ)
உறவேல் (உ)
நமக்கு (ம்)
உன்தன்னோடு உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது = அதான் காதல் வீடு-ன்னு சொன்னேன்! உறவு அப்படி! டேய் முருகா முருகா! :)
//உன்தன்னோடு உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது = அதான் காதல் வீடு-ன்னு சொன்னேன்! உறவு அப்படி! டேய் முருகா முருகா! :)//
அது சரி... தோழி இல்லாம ஒண்ணும் நடக்காதுன்னு தெரியுமே :)
சொற்களையும் பா அமைப்பையும் பார்த்தால் கண்ணதாசன் போல் தோன்றுகிறது. அவருடைய தனிக் கவிதைகளில் (திரைப்படத்திற்காக எழுதாதவை) இந்த பா அமைப்பைப் பார்த்திருக்கிறேன்.
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் குமரா :)
Post a Comment
வாங்க, வணக்கம்!