Monday, September 27, 2010

கண்ணனைப் பணி மனமே!



கண்ணனைப் பணி மனமே - தினமே
கண்ணனைப் பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய சொரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை
கண்ணனைப் பணி மனமே

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவளச் செவ்வாயனை பரமனை மாயனை
கண்ணனைப் பணி மனமே

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம்மிகு துளசி மாலனை பாலனை
கண்ணனைப் பணி மனமே

விண்ணவர் போற்றவே மண்ணில்வரும் வேதப்
பண்ணனை சியாமள வண்ணனை தாமரைக்
கண்ணனைப் பணி மனமே


(பாடல் அனுப்பித் தந்த கண்ணன் என்கிற கேயாரெஸுக்கு நன்றி!)

2 comments:

Radha said...

பாடல் நன்றாக உள்ளது ரவி.
"யாதவ தீபன்" - அருமை அருமை.

Kavinaya said...

ஆமால்ல? கண்ணன் என்ற ரவியின் சார்பாக நன்றி ராதா :)

Post a Comment

வாங்க, வணக்கம்!