Wednesday, December 1, 2010

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!

ஒருவர் பாட, குழுவினர் 'அரோகரா' போடலாம்...


அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு அரோகரா!
பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!

முத்தமிழின் காவலனாம் முருகனுக்கு அரோகரா!
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் செல்வனுக்கு அரோகரா!

வெற்றிவடி வேலனுக்கு வீரனுக்கு அரோகரா!
சக்திசிவ பாலனுக்கு சேந்தனுக்கு அரோகரா!

ஆனைமுகன் இளவலுக்கு அன்புடனே அரோகரா!
ஆறுமுக சாமிக்கு ஆசையோடு அரோகரா!

வள்ளியம்மை நாதனுக்கு வாஞ்சையுடன் அரோகரா!
சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!


--கவிநயா

12 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சொல்லிச் சொல்லிப் பாடிடுவோம் செல்லத்துக்கு அரோகரா!//

romba pidichi irukku :)

Kavinaya said...

வருக கண்ணா.

நம்புவீங்களோ மாட்டீங்களோ, அந்த வரி எழுதும்போது உங்களை நினைச்சேன் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நம்புவீங்களோ மாட்டீங்களோ, அந்த வரி எழுதும்போது உங்களை நினைச்சேன் :)//

ஹா ஹா ஹா
செல்லம்-ன்னு சொல்லும் போது ரவி ஞாபகமா? முருகா! You are so chellam muruga! Love you! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பித்தனுக்குப் பாடம் சொன்ன பாலனுக்கு அரோகரா!//

அக்கா
யாரு பித்தன்? அப்பனுக்கு பாடஞ் சொன்னான் தெரியும், பித்தனுக்கு எப்போ பாடஞ் சொன்னான்? விளக்கம் ப்ளீஸ்! :)

Kavinaya said...

//யாரு பித்தன்? அப்பனுக்கு பாடஞ் சொன்னான் தெரியும், பித்தனுக்கு எப்போ பாடஞ் சொன்னான்? விளக்கம் ப்ளீஸ்! :)//

அவன் அப்பன் ஒரு பித்தன் தானே... அதனால அப்படிச் சொன்னேன். பொருட் குற்றம் கண்டு பிடித்தீரா, நக்கீரரே? :)

Kavinaya said...

//ஹா ஹா ஹா
செல்லம்-ன்னு சொல்லும் போது ரவி ஞாபகமா? முருகா! You are so chellam muruga! Love you! :)//

:)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவன் அப்பன் ஒரு பித்தன் தானே... அதனால அப்படிச் சொன்னேன். பொருட் குற்றம் கண்டு பிடித்தீரா, நக்கீரரே? :)//

சேச்சே...நக்கீரர் இஸ் ஒன்லி குமரன் அண்ணா ஃப்ரம் மதுரை! :)
ஐ ஆம் ஆல்சோ பித்தன் ஒன்லி!

பித்தா, பிறை சூடி இறைவா-ன்னு சுந்தரர் தேவாரத்தை, உங்க வாயில் இருந்து வாங்கத் தான் அந்தக் கேள்வி கேட்டேன்-க்கா! :)

Kavinaya said...

//ஐ ஆம் ஆல்சோ பித்தன் ஒன்லி! //

அப்படியா... நீங்க ஒன் (அப்)பாவிச் சிறுவன்னு நினைச்சேனே :)

//பித்தா, பிறை சூடி இறைவா-ன்னு சுந்தரர் தேவாரத்தை, உங்க வாயில் இருந்து வாங்கத் தான் அந்தக் கேள்வி கேட்டேன்-க்கா! :)//

"பித்தா, பிறை சூடி இறைவா!"

:)

Vaanavil mazhai said...

கவிநயா வணக்கம் பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

Kavinaya said...

//கவிநயா வணக்கம் பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் //
வாருங்கள். முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி வானவில் மழை!

Unknown said...

மகிழ்ச்சி
இந்தப் பாடல் பாடும்போது நல்ல தாளத்துடன் வரும் படி எழுதியமைக்கு.

முதலோ முடிவோ முயற்சி முக்கியம்

Kavinaya said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜகதீசன்!

Post a Comment

வாங்க, வணக்கம்!