Saturday, December 25, 2010

ஓம் நமோ நமசிவாய!



ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ

செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ

தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ

அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

--கவிநயா

பி.கு. வைத்தீஸ்வரன் கோவில் வழிநடைப் பயணத்துக்காக ஒருத்தர் மெட்டு கொடுத்து, எழுத முடியுமான்னு கேட்டிருந்தார். அவருக்காக எழுதிய பாடல்...

No comments:

Post a Comment

வாங்க, வணக்கம்!