Sunday, September 19, 2010

கலைநிறை கணபதி சரணம் சரணம்



(குமரன் தந்த பாடல் விளக்கம் கீழே)

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்

சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்


படத்துக்கு நன்றி: தக்குடு

குமரன் தந்த பாடல் விளக்கம்: நன்றி குமரா!

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவ குக சரணம் சரணம்

சிலை மலை உடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம்
உமை சிவை அம்பிகை சரணம் சரணம்

சிவ குடும்பத்தைச் சரணடையும் வரிகள் இவை. கணபதியை முதல் மூன்று வரிகளாலும், சரவணபவகுகனை நான்காவது வரியாலும், சிராப்பள்ளி மலையையும் கைலை மலையையும் உடைய சிவபெருமானை அடுத்த இரு வரிகளாலும், நடுக்கம் இல்லாதவளும் நடுக்கம் தீர்ப்பவளுமான உமை சிவை அம்பிகை பராசக்தியை அடுத்த இரு வரிகளாலும் சரணடைகிறோம்.

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவம் அற நினைபவ சரணம்
நெடியவன் விழி தரு நெடியவ சரணம்

முதல் மூன்று வரிகளும் கணபதியைப் போற்றுகிறது. நான்காம் வரி சிவபெருமானைப் போற்றுகிறது. ஒரு முறை ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானைத் திருமால் அருச்சிக்கும் போது ஒரு தாமரை குறைய தாமரைக்கண்ணன் தனது ஒரு கண்ணையே எடுத்து அருச்சித்தாராம்; அப்போது சிவபெருமான் அவரது திருக்கண் திரும்பக் கிடைக்கும் படி அருளினாராம். அக்கதையைச் சொல்கிறது இந்த வரி.

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினில் உயரிய பெரியவ சரணம்
முறை தெரி மறையவ நிறையவ சரணம்
முடி அடி தெரி(ய) அரு முதியவ சரணம்

வல்லபையை அணைத்துக் கொண்டிருக்கும் வல்லப கணபதியை முதல் இரு வரிகளிலும், அடி முடி அறியவொண்ணா அண்ணாமலையானை அடுத்த இரு வரிகளாலும் போற்றுகிறது இவ்வரிகள்.

**
வலவையை மருவிய புயதரன் படம் அதனால் இந்த இடுகைக்குப் பொருத்தமாக இருக்கிறது. :)

(பொருள் தெரியாமலேயே இட்டேன், பொருத்தமாக தானே வந்து அமர்ந்து கொண்ட ஆனைமுகனின் கருணையை என்னென்பது! --கவிநயா)


10 comments:

குமரன் (Kumaran) said...

தக்குடு ரொம்ப பொருத்தமான படமா தான் குடுத்துருக்கார் அக்கா. :)

Kavinaya said...

:) ஆமால்ல? ஆனா அவர் குடுக்கலை. நானே எடுத்துக்கிட்டேன், அவரோட ஸ்லோகம் வலைப் பதிவிலிருந்து :)

Kavinaya said...

//நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்//

அப்படியே இந்த ரெண்டு வரிக்கும் விளக்கம் தந்தீங்கன்னா நல்லாருக்கும் :)

தக்குடு said...

ரெண்டு பெரிய மனுஷா இந்த சாதாரண ஆளை பத்தி பேசிக்கர்தே பெரிய பாக்யம்தான்....:) தம்பி போட்டோவை எடுக்க அக்கா அனுமதி வாங்கனுமா என்ன? ..:)

Kavinaya said...

//ரெண்டு பெரிய மனுஷா இந்த சாதாரண ஆளை பத்தி பேசிக்கர்தே பெரிய பாக்யம்தான்....:) //

சாதாரணத்துக்கும் உங்களுக்கும் ரொ...ம்ப (கல்லிடைக்கும் தோஹாக்கும் உள்ளதை விட அதிகம்) தூரம்னு தெரியுமே :)

//தம்பி போட்டோவை எடுக்க அக்கா அனுமதி வாங்கனுமா என்ன? ..:) //

நன்றி தம்பீ :)

Radha said...

ஓ ! குமரன் ஏதோ பஜனை பாடல்கள் சுட்டி அனுப்பி இருக்காரே அப்படின்னு வந்து பார்த்தா உங்க வலைப்பூ தான இது?
அம்பாள் மட்டும் போதவில்லை என்று மொத்த குடும்பத்தையே வளைத்து போட பார்கறீங்களா? நன்றாக நடக்கட்டும் ! :-)

Kavinaya said...

வாங்க ராதா! உங்களைக் கண்டு பரம சந்தோஷம் என்று சொல்லச் சொன்னார் வல்லப கணபதி :)

வீட்டிலும் கோவிலும் பாடுவதற்காக தோழிகளும் நானும் பஜனைப் பாடல்களை தேடி அலுத்து விட்டோம். அதனாலதான் நானே ஆரம்பிச்சிட்டேன். கையில் கிடைக்கும் பாடல்களை இங்கே இட்டு வைத்தால் எங்களைப் போலத் தேடுவோருக்கு பயன்படுமே என்றுதான் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சரண கோஷம் நல்லா ஒலிக்க ஆரம்பிச்சிருச்சி-க்கா! குமர விளக்கம் நல்லா குமரமா இருக்கு!

பாடும் போது அதைப் பதிவு பண்ணி, இங்கும் இட்டு வச்சீங்கன்னா, பாடத் தெரியாத நாங்களும், அப்படியே வரிகளோடு சேர்ந்து மெட்டையும் கத்துப்போம்!

Unknown said...

சூப்பர் கணபதி பாடல்

Unknown said...

சூப்பர் கணபதி பாடல்

Post a Comment

வாங்க, வணக்கம்!