பிள்ளையார் பிள்ளையார்
பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரையின் ஓரத்திலே
அரசமரத்தின் நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
மண்ணினாலே செய்திடினும்
மஞ்சளினாலே செய்திடினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் காட்டும் பிள்ளையார்
அவல்பொரி கடலையும்
அரிசிகொழுக் கட்டையும்
கவலையின்றி தின்னுவார்
கண்ணைமூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையை
காணவேண்டி அனுதினமும்
எலியின்மீது ஏறியே
இஷ்டம்போல சுற்றுவார்
பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
**
2 comments:
சின்னக்குழந்தைகளுக்கு ஏற்ற பாடல் இது அக்கா.
முதல் வருகை! பிள்ளையாரோட தம்பி :) ரொம்ப சந்தோஷம், குமரா!
Post a Comment
வாங்க, வணக்கம்!